கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் - சென்னை ஐஐடி இயக்குநர் பேச்சால் சர்ச்சை
மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவத்துறை
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்தல், பல ஆயிரம் கிமீ தொலைவில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை என மருத்துவத்துறை பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பிரபல கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி மாட்டின் சிறுநீரை குடித்தால் உடலுக்கு நல்லது நோய்கள் குணமாகும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர்
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், ஒருமுறை எனது தந்தை ஜுரம் அடிப்பதால் மருத்துவரிடம் செல்லலாமா என ஒரு சந்நியாசியிடம் கேட்டார். அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடி என கூறினாராம். உடனடியாக அவர் கோமியத்தை பருகவும் அடுத்த 15 நிமிடத்தில் ஜூரம் குணமாகி விட்டது. காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு கோமியம் சிறந்த மருந்து என பேசியுள்ளார்.
கோமியம்
முன்னதாக கோமியம் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என வாட்சப் போன்ற தளங்களில் வதந்தி பரவி வந்த நிலையில், மாட்டின் உடலில் உள்ள கழிவுகள்தான் சிறுநீராக வெளியேறுகிறது. அதை குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர்.
"காய்ச்சல் வந்தால் கோமியம் குடிக்க வேண்டும்"
— shanmugamchinnaraj (@shanmugamchin10) January 18, 2025
என்று சொல்கிற இவர்...
சென்னை ஐஐடி யின் இன்றைய இயக்குனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில்...
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் MS முடித்து...
கணினி துறையில் பல்வேறு ஆய்வுகளை எல்லாம் செய்து...
150க்கு மேற்பட்ட இன்டர்நேஷ்னல் ஜர்னல்ஸ்… pic.twitter.com/75eDfgzUK7
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநர் இவ்வாறு பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.