சென்னை ஐஐடியில் 13 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு 200-ஐ நெருங்குகிறது..!
சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில் கடந்த 19-ந் தேதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் மாணவ,மாணவிகள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
இதன் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது.இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.