Wednesday, Jul 9, 2025

குடிசை மாற்று வாரிய குடியுருப்பு இடிந்து விபத்து - 24 வீடுகள் தரைமட்டம்!

collapses chennaihousing replacement
By Irumporai 4 years ago
Report

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே, விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு வசித்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மக்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இடிந்து விழுந்த கட்டடத்தில் யாரும் சிக்கி உள்ளார்களாக என்றும் தேடி வருகின்றனர்.

காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த டி பிளாக்கில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் தீயணைப்புத்துறை வீர‌ர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.