எங்க ஊரு மெட்ராஸ்...ஷாப்பிங் முதல் ஷூட்டிங் வரை...எல்லாமே இங்க ஸ்பெஷல் தான்
இன்னும் ஒரு வாரத்தில் சென்னை தனது 383-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னபட்டணமாக இருந்து பின்னர் மெட்ராஸ் நகராக மாறி தற்போது சென்னையாக இருந்து நகரத்தின் சில முக்கிய வரலாற்றை காணலாம்.
சென்னப்பட்டினம்
தமிழகத்தின் தலைநகரம் மட்டுமின்றி ஆக்ஸிஜனாகவும் இருந்து வருவது சென்னை தான். வங்க கரையோர நகரமான சென்னை கடந்த 1639-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வருகை பிறகு தென்னிந்தியாவின் முக்கிய நகராக மாறியது.
தற்போதும் இருக்கும் சென்னை ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலத்தை வாங்கிய ஆங்கிலேயர்கள் நிலத்தை விற்றவரான அய்யப்பன் என்பவற்றின் தந்தை சென்னப்பநாயகரின் பெயரை கொண்டு அருகில் உருவான நகருக்கு சென்னப்பட்டினம் என பெயரிட்டனர். அவ்வாறு, 1639-ஆம் ஆண்டில் பிறந்த சென்னப்பட்டினம் அருகில் இருந்த கிராமங்களான திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு போன்றவற்றையும் தன்னுடன் சேர்த்து கொண்டது.
மெட்ராஸ்
சென்னப்பட்டினமாக ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த நகர் 1749-இல் போர்த்துகீசியர்களால் கைப்பற்ற பிறகு மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. அப்போது முதல் இந்திய சுதந்திரம் அடியும் அவரை மெட்ராஸ் என்ற பெயரே புழக்கத்தில் இருந்து வந்தது.
சென்னை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-இல் மொழி வரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் தலைநகராக மெட்ராஸ் மாற்றப்பட்டது. பின்னர் கடந்த 1996-ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்டது. பெயருக்கே தனி வரலாறு பெற்றுள்ள சென்னை அதன் வளர்ச்சியிலும் தனி அடையாளத்தை உள்ளடக்கியது. கடற்கரையோரும் உருவாக்கப்பட்ட நகர் என்பதில் பெரும்பாலான வடசென்னை பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் வசித்து வந்தனர்.
மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகே ஹைதராபாத், பெங்களூரு நகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அங்கேயே அனைத்து துறைகளும் மாற்றப்படும் வரை அம்மாநில மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகர் என்றால் அது சென்னை தான்.
பொருளாதாரம்
ஆங்கிலேயர் ஆட்சி முதலே சென்னை தென்னிந்தியாவின் முக்கிய வணீக நகராக இருந்து வந்தது. தென்னிந்தியாவின் முக்கிய நகர் என்ற காரணத்தால், சுதந்திரத்திற்கு பிறகு, சென்னையை சுற்றி பல மத்திய மாநில அரசு அலுவலங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மத்திய தொழிற்சாலைகள் பல அடங்கிய சென்னை 1990-ஆம் ஆண்டிற்கு பிறகு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அந்த துறை சார்பாகவும் அசுரவளர்ச்சியை பெற துவங்கியது. சென்னை தரமணியில் அமைந்துள்ள டைடல் பார்க் தான்ந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும்.
வாட்டும் வெயிலும் இங்க பேமஸ் தான்
வெயில் என்றால் அது தமிழகத்தில் சென்னை தான் என கூறும் அளவிற்கு சென்னையில் ,வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமோ அதே அளவிற்கு சில சமயங்களில் மழையும் பெரும்பாலும் மக்களை சோதித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் காலத்தில் அதிக பட்ச வெப்பமாக 38–42 °C (100–108 °F) இருக்கும். அதே நேரத்தில் ஜனவரி மாதத்தில் அதிக குளிரும், ஜூன் முதல் நவம்பர் மாதத்தில் அதிகபட்ச மழையும் பெய்து வருகிறது.
படிப்பிலும் கெட்டி, பொழுதுபோக்குவதிலும் சுட்டி
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களான அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், ஐஐடி என பல கல்வி முக்கியத்துவம் வாய்ந்த பண்புகளையும் சென்னை கொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகுக் குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், எம்.ஜி.எம். டிட்ஜி வர்ல்டு உள்ளிட்டவைகள் சுற்றுலாத் தலங்களாகும்.
எங்க போனாலும் ஷாப்பிங் தான்
சென்னையில் பாண்டி பஜார் முதல் தி நகர், வண்ணாரப்பேட்டை என அனைத்து இடங்களும் ஷாப்பிங் zone தான். தமிழகத்தை தாண்டி இந்தியாவில் பல இடத்தில் இருந்தும் துணி வாங்கவேண்டுமென்றால் அது சென்னை தி நகர் தான்.
வணிகத்தை தாண்டி எதுவேண்டுமானாலும் அங்க போன கிடைக்கும், இல்லனா இங்க கிடைக்கும் என சென்னையின் பல இடங்கள் பல தரப்பட்ட பொருட்களுக்காக பேமஸ் தான் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்திருக்காது.
சாப்பாடும் ஒரு எமோஷன் தான்
திருநெல்வேலியில், மதுரையில், கோவை, திண்டுக்கல் என ஒவ்வொரு ஊருக்கும் தனி சுவை இருந்தாலும் அவை அனைத்தின் கலவை தான் சென்னை. இந்திய உணவுகளை தாண்டி chinese, french, german என பல நாடுகளின் உணவுகளும் கொஞ்ச கூட டேஸ்ட் மாறாமல் அப்படியே சென்னையில் கிடைக்கும். ஒரு ஒரு கடைக்கும் ஒரு தனி கதை, தனி எமோஷன் என சென்னையும் உணவும் பிரிக்கமுடியாத ஒன்றே.
பிரிக்க முடியாத சினிமாவும் சென்னையும்
சென்னையை பற்றி பேசும் போது தவிர்க்க முடியாதது சினிமா தான். திரையுலகம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்கள் பெரும்பாலும் சென்னையில் தான் எடுக்கப்படும்.தற்போது தமிழ் மொழி படங்களான கோலிவுட் மட்டுமே பெரும்பாலும் இங்கு ஷூட் செய்யப்படுகிறது. கோலிவுட் வணிகம் இந்தியவை தாண்டி பல நாடுகளிலும் விரிந்துள்ளது.
இன்னும் பல சிறப்புகளை கொண்ட சென்னை இன்னும் தனது வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து முன்னேறி வரும் சென்னை என்றும் ஒரு நகர் என்பதை தாண்டி சென்னை என்றால் பலருக்கும் அது emotion தான்.