மன்னிப்பு கோருங்கள்.. விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Tamil Cinema Tamil nadu Chennai Madras High Court Tamil Actors
By Jiyath Jan 30, 2024 05:10 AM GMT
Report

மன்னிப்பு கோராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் இளவரசுவை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அவமதிப்பு வழக்கு

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது.

மன்னிப்பு கோருங்கள்.. விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! | Chennai High Court Warning To Actor Ilavarasu

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை என, ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 12-ம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளவரசு தரப்பு, டிசம்பர் 13-ம் தேதி இளவரசு ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், டிசம்பர் 12-ம் தேதி மாமல்லபுரத்தில் அவர் படப்பிடிப்பில் இருந்ததாகவும், காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகள் போலியானவை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு, காவல்துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!

நீதிபதி உத்தரவு 

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சி.டி.ஆர் விவரங்களை தாக்கல் செய்தார்.

மன்னிப்பு கோருங்கள்.. விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! | Chennai High Court Warning To Actor Ilavarasu

இளவரசு தரப்பில், 12-ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இளவரசு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வுசெய்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், 12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதைக் கூறி, மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து, காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (ஜனவரி 30) தள்ளிவைத்தார்.