ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி : உயர்நீதி மன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை தமிழகத்தில் நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ் .எஸ் அமைப்பானது பிற மாநிலங்களில் பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்த நீதி மன்றத்தில் அனுமதி வாங்கியது , ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் மாநில் கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தன.
ஆகவே ஆர் எஸ் எஸ் பேரணியை தமிழகத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 45 வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .
இன்று காலை ஆர் .எஸ் .எஸ் வழக்கினை விசாரித்த நீதி மன்றம் , கருத்துரிமை, பேச்சுரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என இரு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது
.
மேலும் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி சுற்றுசுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்துள்ளது.