ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் காலவதியாகிவிட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

ADMK AIADMK O. Panneerselvam
By Thahir Mar 13, 2023 09:41 AM GMT
Report

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் கேள்வி 

அதன்படி, இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த நிலையில், மனுக்கள் காலாவதியாகிவிட்டன என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் காலவதியாகிவிட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி | Chennai High Court Order To Aiadmk Case

பதவிகள் காலாவதியானதா என்பது பற்றி நிலுவை மனுவில் தான் தெரியும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடந்த வழக்கில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? என கேள்வி எழுப்பி, ஓபிஎஸ் தரப்பு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.