சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு காலியாக இருந்து வந்தது. இதற்கிடையில், அகலாபாத் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டார்.
அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகின. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
அலகாபாத்தில் இருந்து மாற்றலாகி வரும் முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.