சமீஹா பர்வீனை அனுமதியுங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
போலந்தில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்குமாறு விளையாட்டு மேம்பாடு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான தேசிய தடகள போட்டியில் அனுமதிக்க கோரி சமீஹா பர்வீன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் தகுதி பட்டியலில் முதலிடம் பிடித்தும் பெண் என்பதால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தகுதி பட்டியலில் 8-வது இடம் பிடித்திருந்ததால் அவரது பெயர் இடம்பெறவில்லை என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்தது.
8-வது இடம் பிடித்திருந்தாலும் பெண்கள் வரிசையில் அவர் தான் முதல் இடத்தில் உள்ளார் என கூறிய நீதிபதி, சமீஹா பர்வீனை அனுமதிக்ககோரி உத்தரவு பிறப்பித்தார்.