Saturday, Jul 5, 2025

அதிமுக தேர்தலுக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

edappadipalanisamy chennaihighcourt
By Irumporai 4 years ago
Report

கடந்த 1ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என திருத்தம் செய்யப்பட்டது.

அங்கு சென்று வேட்பு மனு கேட்டவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி அலுவலகத்தைவிட்டு வெளியே தள்ளினர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக  தேர்தலுக்கு எதிரான வழக்கு  : தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | Chennai High Court Dismissed Edappadi Palanisamy

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி அதிமுகவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.