பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

Chennai
By Swetha Subash Apr 25, 2022 07:25 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் அதிரடடியாக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் | Chennai High Court Cancelled Pubg Madan Goondas

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து பப்ஜி மதன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பப்ஜி மதன் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடந்த நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.