சென்னையில் போக்குவரத்து மாற்றம் - வாகனஓட்டிகள் கடும் அவதி: எந்த வழி செல்லக்கூடாது, முழு விவரம்

chennai heavy rain transport way change
By Anupriyamkumaresan Nov 08, 2021 05:48 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகர போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள்:

மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்:-

ஈ.வெ.ரா சாலை

கங்குரெட்டி சுரங்கபாதை

வியாசர்பாடி சுரங்க பாதை

கனேஷபுரம் சுரங்க பாதை

சென்னையில் போக்குவரத்து மாற்றம் - வாகனஓட்டிகள் கடும் அவதி: எந்த வழி செல்லக்கூடாது, முழு விவரம் | Chennai Heavy Rain Transport Way Change

மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:-

ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு (சி.எம்.டி.ஏ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும். பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷ்சல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்ல்லாம். மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு