கொட்டி தீர்க்கும் கனமழை - சென்னையில் ரயில்கள் புறப்பாடு தாமதம்: பயணிகள் கடும் அவதி

chennai heavy rain trains late delay
By Anupriyamkumaresan Nov 07, 2021 12:32 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக சென்னையில் ரயில்கள் புறப்பாடு தாமதம் அடைந்துள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை - சென்னையில் ரயில்கள் புறப்பாடு தாமதம்: பயணிகள் கடும் அவதி | Chennai Heavy Rain Trains Late Delay

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில் மாலை 04.20 மணிக்கு பதிலாக இரவு 07.30 மணி அழிவில் புறப்படும் என்றும், சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில் மாலை 05.40 மணிக்கு பதிலாக இரவு 08.30 மணிக்கு புறப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் பல ரயில்கள் திருவள்ளூர் மற்றும் ஆவடிக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.