சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை...! வாகன ஓட்டிகள் சிரமம்..!
தற்போது சென்னையில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் மழை
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கையில், இன்றும் நாளையும் தமிழகத்தின் தெற்கு, மேற்கு உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
டெல்டா பகுதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 48 மணிநேரத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட உள்பகுதிகளில் தனித்தனியாக மழை பெய்யும்.
புச்சேரி - கோடியக்கரை பெல்ட் இடையே உள்ள கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட கிழக்குப் பகுதிகள் முழுமையாக ஊடுருவி வருகின்றன.
இதற்கிடையில், புதுச்சேரி - சென்னை பெல்ட் இடையே ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். உள்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தற்போது, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மழை நீரில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அடையாறு, எம்.ஆர்.சி.நகர், தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
3.11.22 2:00 PM Today,lower level easterlies are perfectly penetrating the coastal areas between #Puducherry - #Kodiakkarai belt. Meanwhile,there may be rain here and there between #Puducherry - #Chennai belt.Thunderstorms may increase over the interior.#PondyRains #DeltaRains pic.twitter.com/cf5rbaYWh5
— Puducherry Weatherman (@PYWeatherman) November 3, 2022
Heavy rains will be in the south, west interior #Tamilnadu today & tomorrow.
— Rainstorm - வானிலை பதிவுகள் (@RainStorm_TN) November 3, 2022
parts of #Delta will come under very heavy rains. Some places will come under extreme rains in the next 48hrs.#Chennai & suburbs parts of the North interior will see isolated rains. pic.twitter.com/tx7vIbwH0j