கனமழை முன்னெச்சரிக்கை - மின்சாரம் துண்டிப்பு: மக்கள் கடும் அவதி

Chennai power cut Heavy Rain
By Anupriyamkumaresan Nov 07, 2021 05:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக தி.நிகர் ரங்கநாதன் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை அறிவுறுத்தலின்பேரில் மின்வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை - மின்சாரம் துண்டிப்பு: மக்கள் கடும் அவதி | Chennai Heavy Rain Power Cut In Many Areas Suffer

சென்னையில் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றியூர் பகுதிகளிலும் இடி, மின்னலுயுடன் விடாமல் மழை பெய்கிறது.