சென்னை மழை... மக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் - சென்னை மாநகராட்சி வெளியீடு...!

Chennai
By Nandhini Nov 11, 2022 07:11 AM GMT
Report

சென்னையில் பெய்து வரும் கனமழை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கனமழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும் கனமழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

இதனையடுத்து, சென்னையில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த கன மழை பெய்து வருகிறது.

chennai-heavy-rain-flood-call-help-line

மழை உதவி எண்கள் அறிவிப்பு

இந்நிலையில், சென்னையில் மழை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

044-2561 9206

044-2561 9207

044-2561 9208

இலவச உதவி எண்

Toll Free - 1913

Whats app - 9445477205

மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு - 94987 94987