சென்னையில் தொடரும் கனமழை - சாலைகளில் தேங்கும் மழை நீரால் மக்கள் பாதிப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை நீரில் மிதக்கும் சென்னை
இந்நிலையில், நேற்று சென்னையில் இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர். இது எந்த பேக்கேஜில் வருகிறது என்று தெரியவில்லை. pic.twitter.com/GMtHn0qXgZ
— Krishna Kumar Murugan (@ikkmurugan) November 1, 2022