சென்னையில் கனமழை எதிரொலி 8 விமானங்கள் ரத்து

flight Heavy Chennai cancel Rain
By Thahir Nov 10, 2021 04:12 PM GMT
Report

சென்னையில் கனமழை காரணமாக வானிலை மோசமாக உள்ளதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை, திருச்சி, மும்பை, ஹார்ஜா விமானங்கள் வருகை, புறப்பாடு என இருவழித் தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.