சென்னையில் பரவலாக கன மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
விருகம்பாக்கம்,வடபழனி,தாம்பரம்,மதுராந்தகம்,காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக கன மழை தீர்த்துக்கொட்டியது.
அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
3 மணி நேரம் பரவலாக பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.