கனமழையால் நீச்சல் குளமானதா சென்னை? வைரலான புகைப்படம்- பிஜேபி பிரபலத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

chennai flood flood 2015 tn weather tamilnadu rain chennai heavy rain
By Fathima Nov 08, 2021 10:02 AM GMT
Report

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதுடன், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமானதை விட 43 சதவிகிதம் மழை அதிகமாக பொழிந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த எஸ்ஆர் சேகர் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 

விடியல் ஆட்சியில் ஒரு நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை என பதிவிட்டிருந்தார்.


இதைப்பார்த்த நெட்டிசன்கள், 2017ம் ஆண்டு குஜராத் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.