பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வு
Chennai
By Thahir
பெண்கள் வேலைவாய்ப்பில் இந்தியாவின் டாப் நகரங்களாக சென்னை மற்றும் புனே இடம்பெற்றுள்ளது.
சிறந்த நகரமாக சென்னை தேர்வு
இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) நிறுவனமான அவதார் வெளியிட்டுள்ள பட்டியலின்படி பெண்கள் வேலைவாய்ப்பிற்கான இந்தியாவின் சிறந்த நகரமாக சென்னை உள்ளது,
அதைத் தொடர்ந்து புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.
111 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. டெல்லி, சென்னையை விட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்தை பிடித்துள்ளது.