கடைகளில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய வடமாநில கும்பல் கைது!
சென்னையில் போலி நகைகளை அடகு கடை மற்றும் நகைக்கடைகளில் கொடுத்து ஏமாற்றிய வடமாநில கும்பலை போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது அரை கிலோ தங்க நகை, பணம், அடகு வைத்த ரசீது இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து , காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது 5 பேரும் திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றி உண்மையாக நகைகளை வாங்கியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கமலேஷ், அனிதா, நிர்மல் குமார்,
மாலதி, சோனி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.