தேர்தலுக்கு பின் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்க விலை! இன்றைய விலை நிலவரம்

Tamil nadu Silver Gold
By Vinoja May 07, 2026 06:29 AM GMT
Report

தங்கம் ஆபரணங்கள் செய்வதற்காக மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தொன்று தொற்று சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு பின் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்க விலை! இன்றைய விலை நிலவரம் | Chennai Gold Rate Today May 07 2026

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ.112,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக ஏற்றத்தை பதிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு பின் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்க விலை! இன்றைய விலை நிலவரம் | Chennai Gold Rate Today May 07 2026

இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை நிவலரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,150க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,810க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தலுக்கு பின் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்க விலை! இன்றைய விலை நிலவரம் | Chennai Gold Rate Today May 07 2026

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.