தேர்தலுக்கு மத்தியில் அதிரடியாக சரிந்த தங்க விலை! ஏப்ரல் 23 2026 விலை நிலவரம்

Tamil nadu Chennai Gold
By Vinoja Apr 23, 2026 06:27 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாங்குபதில இன்றைய தினம் நடைபெற்று வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது.

அண்மை காலமாக அதிரடியாக அதிகரித்துவந்த தங்கம் மற்றம் வெள்ளி நிலை கடந்த மூன்று தினங்களாகவே தொடந்து சரிவை பதிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு மத்தியில் அதிரடியாக சரிந்த தங்க விலை! ஏப்ரல் 23 2026 விலை நிலவரம் | Chennai Gold Rate Today April 23 2026

இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.1000 குறைந்துள்ளது. சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,448 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.98 குறைவாகும். 10 கிராமுக்கு கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைந்துள்ளது.

மேலும், 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,810 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.270 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் குறைந்து ரூ.2,70,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.