தங்கத்தின் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.36,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 40 ருபாய் குறைந்து ரூ.4,585க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 10 காசுகள் குறைந்து 75 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் தொடர் அதிகரிப்பில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது இல்லத்தரசிகள், நகை பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,000ஐ தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து, ரூ.34,000க்கு கீழ் இறங்கியது.