ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.55,000 குறைவு
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Yashini
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்துள்ளது.
சமீப நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக கடந்த ஜன 29ஆம் திகதி அன்று அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலையும் மாலையும் சேர்த்து ரூ. 7,600 குறைந்த நிலையில், இன்றும் அதே அளவு குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ. 950 குறைந்து ரூ.14,900 ஆக உள்ளது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ. 350க்கும், ஒரு கிலோ ரூ. 55,000 குறைந்து ரூ. 3,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.