ஜப்பான் இளைஞரை கரம் பிடித்த சென்னை பெண் - பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம்

Chennai Japan Marriage
By Karthikraja Feb 21, 2026 12:47 PM GMT
Report

சென்னை பெண் ஜப்பான் இளைஞரை சுயமரியாதை திருமணம் செய்துள்ளார்.

ஜப்பானியரை சுயமரியாதை திருமணம் செய்த சென்னை பெண்

சென்னையை சேர்ந்த செல்வி என்ற பெண் வேலைக்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

அங்கு ஜப்பானை சேர்ந்த ஷூன்யா யாஷிமாக் என்பவருக்கும் செல்விக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

ஜப்பான் இளைஞரை கரம் பிடித்த சென்னை பெண் - பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் | Chennai Girl Self Respect Married Japan Guy

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், சென்னையில் அமைந்துள்ள பெரியார் திடலில் செயல்பட்டு வரும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் வைத்து, ஜப்பான் மாப்பிளைக்கும் சென்னை பெண்ணுக்கும் நேற்று (20.02.2026) சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது.

ஷூன்யா யாஷிமா என்ற பௌத்தர் ஆவார். இது மதம், நாடு, மொழி கடந்த திருமணமாக அமைந்துள்ளது.