கட்டிட தொழிலாளியின் மகள் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்று சாதனை - தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் வாழ்த்து...!
தமிழகத்தில், செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த தமிழ்ப்பெண்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா (20), இவர் தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமை தவித்த ரக்சயா அதெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய லட்சியத்திற்காக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ‘Forever star india awards’ நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார். பிறகு, மாநில அளவிலான போட்டி கடந்த செம்டம்பர் மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்து கொண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டித் தூக்கினார். இந்த அழகிப்போட்டியில் சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள்.
இதனையடுத்து, இந்த மாதம் நடைபெறும் ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் ரக்சயா 2ம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் 2ம் பிடித்த ரக்சயாவிற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.