சென்னை பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்
கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இதனையடுத்து, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிலைகளை கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.
நேற்று சென்னை கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.