வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், சென்னையில் பயிற்சி பெற தமிழக அரசு அனுமதி..!
chennai
medical students
foreign students
tn govt
By Anupriyamkumaresan
வெளிநாட்டில் 5 ஆண்டு கால மருத்துவ படிப்பு முடித்த 80 மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவர் கல்லூரிகளில் பயிற்சி பெற தமிழ்க அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் பல மாணவர்கள், தங்கள் பள்ளி பருவத்தினை தமிழகத்தில் படித்து விட்டு, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடுகளில் சென்று பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர், தமிழகத்தில் பயிற்சி பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி பெற சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
