சென்னையில் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு - மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
chennai
ford
discuss
cm stalin
colse
By Anupriyamkumaresan
ஃபோர்டு கார் நிறுவனம் சென்னையில் உற்பத்தியை நிறுத்தும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஃபோர்டு கார் நிறுவனம், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து ஃபோர்டு கார் நிறுவனம் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.