கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : பதட்டத்தில் மருத்துவமனை

Tamil nadu Chennai
By Irumporai Nov 15, 2022 03:04 AM GMT
Report

 கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் சவ்வு பிரச்சனை காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காலில் தசை பிடிப்பு 

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : பதட்டத்தில் மருத்துவமனை | Chennai Football Player Surgery Died

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர்.

அலட்சிய போக்கு காரணமா இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர்.

போலீசார் குவிப்பு

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.