World Cup: நெதர்லாந்து அணியில் பவுலராக சென்னை டெலிவரி பாய் - எப்புட்றா..?
நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நெட் பவுலராக இடம்பிடித்துள்ளார்.
உலகக் கோப்பை
கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றனர்.
மீதமுள்ள 2 அணிக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஜிம்பாவே நாட்டில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை அணியும், இரண்டாவது சுற்றில் மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் தகுதி பெற்ற 10 அணிகளும் அதற்கு முன்பாக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றனர்.
ஆனால் நெதர்லாந்து அணிக்கு அதற்கான எந்த போட்டிகளும் இல்லை. இதனால் நெதர்லாந்து அணி இந்திய சூழ்நிலையில் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும், சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்காகவும் வலைப் பயிற்சிக்கு சுழற் பந்து வீசக்கூடிய வீரர்களை தேடினர். அதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை விநியோகம் செய்தது.
நெதர்லாந்து
இந்நிலையில் நெதர்லாந்து அணி 10,000 விண்ணப்பங்களை பெற்றனர். அதிலிருந்து 4 பேரை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த நான்கு பேரில், ஒருவர் சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார். அவர் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் லோகேஷ் குமார், இந்திய வீரர் குல்தீப் யாதவ் போல இடதுகை சைனா மேன் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை குறித்து லோகேஷ் குமார் கூறுகையில் "இது எனது தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் டிஎன்சிஏ மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடியது கிடையாது.
நான் ஐந்தாவது பிரிவில் நான்கு வருடங்களாக விளையாடி வருகிறேன். நான்காவது பிரிவில் விளையாடுவதற்கு இந்தியன் ஆயில் அணிக்கு பதிவு செய்து வைத்திருக்கிறேன். நெதர்லாந்து அணியால் நெட் பவுலராக நான் தேர்வு செய்யப்பட்ட பின், எனது திறமை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Our first training session in India for the #CWC23 began with a small induction ceremony for our four new net bowlers from different parts of India. ? pic.twitter.com/ug0gHb73tn
— Cricket?Netherlands (@KNCBcricket) September 20, 2023