தொடர்ந்து பெய்யும் கனமழை - புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil nadu Chennai
By Nandhini Nov 11, 2022 07:11 AM GMT
Report

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கனமழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

இதனையடுத்து, சென்னையில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

chennai-flood-puzhal-aeri

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

புழல் ஏரிக்கு இன்று காலை 558 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,070 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, புழல் ஏரியிலிருந்து இன்று 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 100 கன அடியிலிருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இன்று புழல் ஏரியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.   

chennai-flood-puzhal-aeri