ரூ.1000 உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம் - உயர்நீதிமன்றம் திடீர் அறிவிப்பு!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
தமிழக அரசு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற யோசனை
தொடர்ந்து, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள், நிவாரண பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசு குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.