குளம் போல் தேங்கிய மழை நீர் - பாத் டப்பில் அமர்ந்து பாட்டுப்பாடி படகோட்டிய மன்சூர் அலிகான் - வீடியோ வைரல்
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த மழைநீரில் நடிகர் மன்சூர் அலிகான் பாட்டுப்பாடி, படகோட்டும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை சாலைகள், தாழ்வான பகுதிகள், வீடுகளை சுற்றி மழை நீர் குளம் போல் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இந்த மழை நீரில், பாத் டப்பில் அமர்ந்து பாட்டு பாடி மன்சூர் அலிகான் படகோட்டும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி,, மழை நிலமையை பாடி, மகிழும் நடிகர் மன்சூர் அலிகான்!
— Govindaraj PRO (@GovindarajPro) November 27, 2021
PRO_கோவிந்தராஜ் pic.twitter.com/7m8UUFCOpO