பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களில் இதுதான் முதலிடம் - கவனிச்சீங்களா?
பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில், சென்னை முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், சென்னையில் கடந்தாண்டு பெண்களுக்கு எதிராக 736 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறைவான வழக்குகள் பதிவாகி இருந்தாலும், கடந்தாண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களில் 59 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.
முதலிடம்?
மேலும், போதிய ஆதாரமின்மை, சரியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் 109 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிக அளவில் பெண் காவலர்கள் பணியில் இருப்பது, ரோந்து பணி அதிகரிப்பு, சி.சி.டி.வி கேமரா உள்ளிட்டவற்றால் மகளிருக்கு எதிரான குற்றங்கள் பெரும் அளவு குறைந்திருப்பதாக மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு குறைவாகப் பார்க்கப்படுகிறது.
இதில், டெல்லியில், கடந்தாண்டு பெண்களுக்கு எதிராக 14 ஆயிரத்து 158 வழக்குகளும், மும்பையில் 6 ஆயிரத்து 176 வழக்குகளும், பெங்களூருவில் 3 ஆயிரத்து 924 வழக்குகளும் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.