சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு
தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த்து.
அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது.
அதன்படி அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், ஓட்டேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.