அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து..! குழந்தைகள் நலம்..!
சென்னையில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று மின்கசிவினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படவில்லை என மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். சென்னை கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள மருத்துவர்கள் அறையில் எதிர்பாராத விதமாக நேற்று மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. இதனை உணர்ந்த ஊழியர்கள், மருத்துவர்கள் அந்த தளத்தில் இருந்த குழந்தைகளையும், தாய்மார்களையும் பத்திரமாக வெளியேற்றினர். இதனால் நேற்று இரவு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனையை ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்கசிவால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குழந்தைகளின் உடல் நலத்தில் எந்த பாத்திப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
