சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்: வெற்றிக்கு பின் கோஹ்லி பேசியது என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் சுவாரசியமும் இல்லை, உத்வேகமும் இல்லை, ஆனால் இரண்டாவது போட்டியில் நாங்கள் மீண்டு வந்து சிறப்பாக விளையாடினோம் என தெரிவித்தார்.
மேலும், சென்னை ரசிகர்கள் பற்றி அனைவரும் அறிந்ததே, அவர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட்டின் புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அபாரமாக இருக்கிறது.
ஒரு பவுலர்களுக்கு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ரசிகர்களின் உத்வேகம் கிடைக்க வேண்டுமென்றால், அதனை சென்னை ரசிகர்கள் பூர்த்தி செய்துவிடுகிறார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் சென்னை ரசிகர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
It's good to have you back #TeamIndia fans ?
— BCCI (@BCCI) February 13, 2021
Chepauk ?️ has come alive courtesy you ? #INDvENG @Paytm pic.twitter.com/QVYISf40O1