500 ஆண்கள்..50 பெண்கள்.. விடிய விடிய நடந்த இசிஆர் கச்சேரி : தட்டி தூக்கிய போலீஸ்

ecrparty ecrloversparty
By Petchi Avudaiappan Mar 20, 2022 06:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதை பொருள் பார்ட்டி நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

சென்னை கிழக்கு கடற்கறை சாலை பகுதியில் பல்வேறு கடற்கரை ரிஸார்ட்டுகள் உள்ளன. இங்கு அவ்வப்போது போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டிகள் நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இதுகுறித்து  கொடுக்கப்படும் புகார்களை வைத்து போலீஸ் அங்கு சோதனை நடத்துவர். 

இதனிடையே  பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாக்கு சொந்தமான ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

அங்கு மது விருந்தில் கலந்துகொண்ட  500 ஆண்களை கைது செய்தனர்.  நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் காவல் ஆணையர் ரவி மது விருந்தில் கலந்துகொண்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.