சென்னையில் நிலநடுக்கம் - பீதியில் பொதுமக்கள்
chennai
earth quake
people afraid
By Anupriyamkumaresan
வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் பெசண்ட்நகர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.