தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் ஒன்றரை மடங்கு காற்று மாசுப்பட்டுள்ளது... - வெளியான தகவல்...!

Diwali Chennai
By Nandhini Oct 25, 2022 06:19 AM GMT
Report

தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் ஒன்றரை மடங்கு காற்று மாசுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வண்ண, வண்ண உடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.

கடந்த சில வாரங்களாக தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்தது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

3 ஆண்டு சிறைத்தண்டனை

காற்று மாசுப்படுவதைத் தடுக்க, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரித்தல், பட்டாசு விற்பனை செய்தால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

chennai-diwali

சென்னையில் காற்று மாசுப்பட்டுள்ளது

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடிக்கப்பட்டதால், சென்னையில் காற்று மாசு ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மணலி, பெருங்குடி, ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.