#HBDChennai......வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று 384 பிறந்தநாள்
தமிழகத்தின் தலைநகரான சென்னை தனது 384-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சென்னை குறித்து ஒரு சின்ன recap பார்க்கலாம்
சென்னை
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஒரு தனி அடையாளம் உண்டு. ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் அடையாளம் என்றால் அது சென்னை தான். வந்தாரை வாழவைக்கும் சென்னை என பலதரப்பட்ட மக்களால் புகழப்படும் சென்னை இன்று தன்னுடைய 384-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
பல இயற்கை பேரழிவுகளை சந்தித்த பிறகும், சென்னை தொடர்ந்து 400 வருடங்களை நெருங்கி இன்றும் கம்பீரமாக திகழ்ந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னபட்டணமாகவும், போர்த்துகியர்களின் காலத்தில் மெட்ராஸ் ஆகவும் இருந்த நகரம், 1996-ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் பெற்றது.
வந்தாரை வாழவைக்கும் சென்னை
சென்னையின் அடையாளம் என தனியாக எதனையும் பிரித்து கூறமுடியாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மெரினா பீச் வரை சென்னையில் பல அடையாளங்கள் இருக்கின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி அடைய, நவீன IT பூங்காக்கள் முதல் எக்ஸ்போர்ட் கம்பெனி வரை பல தொழில்களில் சிறந்து விளங்கும் சென்னை, தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரமாகவே விளங்கி வருகின்றது.
கல்வியிலும் சிறந்து விளங்கும் சென்னை இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் இருந்து பலதரப்பட்ட மாணவர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்தியாவின் 6 குடியரசு தலைவர்கள் பயின்ற பல்கலைக்கழகமான மெட்ராஸ் பல்கலைக்கழகம் இன்னும் பல சிறப்புமிக்க தலைவர்களை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறது.
பிரிக்கமுடியாத Sports
வடநாட்டில் இருந்து வந்த தோனியை சென்னை தனது செல்லப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதே சென்னை விளையாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கிரிக்கெட்டை தாண்டி, சென்னையில் கால்பந்து, கபடி, வாலிபால் என பல விளையாட்டுகளையும் பின்பற்றுவோர் அதிகம்.
அரசியல் அதிகம் பேசுபடுவதும், விவாதிகப்படுவதும் சென்னையில் தான் கூறும் போது, தமிழகம் முன்னேறிய ஒரு மாநிலமாக திகழ அதற்கு சிறந்து உதாரணம் சென்னையே. ஜாதி, மாத, இனம் என பல தரப்பட்ட மக்களையும் அரவணைத்து கொண்டுள்ள சென்னை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வாக்கியத்தை சரியாக கடைபிடிக்கிறது வருகிறது என்று கூறுவதில் மாற்றுக்கருத்து இருப்பதில்லை.
தவிர்க்கமுடியாத சினிமா
இவ்வளவு கூறிவிட்டு சினிமாவை கூறமால் போவதும் தவறே. சென்னை - சினிமா இது இரண்டு ஒரு தனி செண்டிமெண்ட் தான். திரை கனவுகளோடு வெளி ஊர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பலரின் கனவுகளுக்கு வழிகாட்டி, இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை அவர்களுக்கு அளித்து வருகிறது சென்னை.
சென்னையை கொண்டாடுவது நம்மை நாமே கொண்டாடுவது போல தான் என்றாலும், இன்றும் நமது வாழ்விற்கு வழிகாட்டி வரும் சென்னையின் பிறந்தநாள் அன்று சென்னைக்கு நாமும் ஒரு வாழ்த்தினை கூறிவோம்.