மாமல்லபுரத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம்

ChennaiRains cyclonealert
By Irumporai Nov 10, 2021 01:48 PM GMT
Report

வானிலை ஆயுவு மையம் இன்று காலை தெரிவித்திருந்த தகவலின்படி, தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில்

தற்போது வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அதி கனமழை - இன்று இரவில் இருந்து நாளை வரை பொது மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது

வீட்டில் ஆதார், ரேஷன், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் அதிக மழை நீர் தேங்கி நிற்கும் 166 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன; வரும் காலங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்படும்; கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 400 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.