வீட்டு மாடியில் முருங்கை கீரை பறித்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்..!
death
chennai
current
By Anupriyamkumaresan
சென்னையில், வீட்டு மாடியில் நின்று முருங்கைக்கீரை பறிக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் சாஸ்திரி நகரை சேர்ந்த குழந்தை வேலு, சாலையோர டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று முருங்கை கீரை பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மேலே இருந்த மின்னழுத்த ஒயர் உரசியதில்ம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.