அக்கா கணவரோடு தகாத உறவு? ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! இறந்த பின்பும் மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவன்!
சென்னையில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி லேபர் காலனி லயன்ஸ் ஸ்கூல் சாலையை சேர்ந்த நித்தியானந்தன் லோடுமேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது நண்பரின் தங்கையான புவனேஸ்வரி என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு புவனேஸ்வரி அடிக்கடி அவளது அக்காவின் கணவரோடு தொலைபேசியில் உரையாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை பார்த்த நித்தியானந்தன் புவனேஸ்வரியை கண்டித்து வந்துள்ளார்.
ஆனால் கொஞ்சம் கூட கணவர் பேச்சை கேக்காத புவனேஸ்வரி தொடர்ந்து அவரது மாமாவிடம் பேசி வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த கணவன் ஆத்திரத்தில் புவனேஸ்வரியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவி இறந்த பிறகும் ஆத்திரம் தீராமல், உடல் முழுவதும் கத்தியால் குத்தி குத்தி கோபத்தை தணித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புவனேஸ்வரியின் சகோதரரான அவரது நண்பரை தொடர்புக்கொண்டு உனது தங்கையை கொலை செய்து
விட்டேன் என்று கூறிவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.