38 வயது திருமணமான பெண்ணின் காதல் வலையில் 18 வயது இளைஞன் - பயங்கர செயலில் ஜோடி!
இன்ஸ்டாவில் பழகிய காதல் ஜோடி வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இன்ஸ்டா காதல்
நெல்லையை சேர்ந்தவர் பாத்திமா(38). சென்னையை சேர்ந்த அக்பர் பாட்ஷா(18) என்ற இளைஞருடன் இன்ஸ்டாவில் நெருங்கி பழகி வந்துள்ளார் இது காதலாக மலர தனக்கு ஏற்கெனவே, திருமணம் ஆகிவிட்டது எனவும், எனக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றனர் என தெரிவித்த பாத்திமா,
தன் கணவரை பிரிந்து தனியே வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். உடனே, பிரச்சினை இல்லை என்னோடு வந்துவிடு உன்னை பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி சென்னை அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் போதிய பணமில்லாத காரணத்தினால் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
துணிகரம்
ஆள்நடமாட்டம் இல்லாத இடம், தனியே வரும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் போன்றோரிடம் அக்பர் பாஷா வழிப்பறி செய்து தப்பியோடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஒருவேளை மாட்டிக்கொண்டால் மறைந்திருந்து நோட்டமிடும் பாத்திமா
களத்தில் இறங்கி அவர்களுடன் அக்பர் பாஷாவை யாரென தெரியாதது போல் நடித்து மற்றவர்களை திசை திருப்பும் வேலையை காட்டியுள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கத்தில் மூதாட்டி கனிகா என்பவரிடம் இருவரும் செயினை பறித்துள்ளனர்.
இதில் அலறிய சத்தம் கேட்டு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், இருவர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.