போகியில் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி புது முயற்சி
போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி புது முயற்சியை கையில் எடுத்துள்ளது.
சென்னைமாநகராட்சி
போகி பண்டிகையின் போது மக்கள் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இதனால் சுற்றுசூழல் மாசுப்படும் இந்த நிலையில் இதனை தடுக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புகையினை தடுக்க புதிய முயற்சி
அதன்படி, 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அவற்றை தனியாக பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்படைக்க, மண்டல அலுவலர்கள் 1 முதல் 15 வரை உள்ளவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொது மக்களுக்கு 07.0123 முதல் விழிப்புணர்வு (Awarenes) ஏற்படுத்தும் வகையில் BOV வாகனம் மூலம் Audio message விளம்பரம் செய்யுமாறும், மேலும் அனைத்து CI, C.S & AEE(SWM) தனிக்கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.