விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

chennai order corporationcommissoner finecollect
By Anupriyamkumaresan May 19, 2021 04:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு மாதத்தில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர், கடைகள், நிறுவனங்கள் என இதுவரை 1.63 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.